விழுப்புரம் மாவட்டம் 28 வது வார்டு மணிநகர் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் தார் சாலையாக மாற்றப்படாத காரணத்தால் மண்சாலை அனைத்தும் தற்போது சேரும் சகதியுமாக காணப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே சாலைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக காணப்படுகின்றன.

இதில் குறிப்பாக 28-வது வார்டு மணி நகரை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாவது தெருவை சேர்ந்த சாலைகள் அனைத்தும் மிக மோசமாக பொதுமக்கள் வெளியே நடக்க முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக கூட வெளியில் செல்ல முடியாத அவல நிலையில் உள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)

விழுப்புரம்

விழுப்புரம்

சேறும் சகதியுமாக காட்சி தரும் சாலை.. (இடம்: விழுப்புரம் மணி நகர்)

முதியவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வருவதற்கு வழியில்லாமல் இருக்கிறது, சேற்றில் நடந்து செல்வதால் கால்களில் சேற்றுப்புண் போன்ற தொற்று நோய்கள் வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

சேறும் சகதியுமாக காட்சி தரும் சாலை.. (இடம்: விழுப்புரம் மணி நகர்)

எனவே, இந்த சாலையை உடனடியாக தற்காலிகமாக சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று 28வது வார்டு கவுன்சிலர் வடிவேல் பழனி தலைமையில், பொதுமக்கள் சேற்றில் நடந்து நூதன முறையில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link