ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் விவசாய சங்கத் தலைவரை கொலை செய்ததாக கூறி சிறுவன் சரண்டர் ஆகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக இறந்தார். இவர் சமூக மக்களுக்கான பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு இவர் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் யாரோ சண்முகசுந்தரத்தை வெளியே வரவழைத்து அரிவாள் உள்ளிட்டோர் கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரைவழங்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்கள் கைப்பற்றி கைரேகைகளை பதிவு செய்தனர்.

மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பமிட்டு வீட்டை சுற்றியுள்ள வயல்வெளிகளில் சுற்றி வந்து யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொலை சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்க: விஏஓக்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஏஓ சங்கம் கடிதம்

இந்நிலையில், 18 வயதான சிறுவன் கீழப்புலிவார் சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்ல நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சைக்கிளில் சென்றபோது சண்முகசுந்தரம் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் கொலை செய்ததாக அச்சிறுவன் வாக்குமூலம் அளித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link