புதுடில்லி: போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் விவகாரத்தில் இளம்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பெரிய அளவில் பூகம்பமாக வெடித்துச் சிதறும் சம்பவம் நடந்துள்ளது.
இதற்குப் பின் மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ‘திங்க் சேஞ்ச் போரம்’ என்ற அரசு சாரா ஆய்வு அமைப்பு கருத்துக் கணிப்புகளை நடத்தியது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பின் மக்களிடையே உளரீதியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிலும் 10 – 17 வயதுடைய இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள நிலையைக் கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் இது பெரிய அளவில் பூகம்பமாக வெடிக்கும். இது மக்களின் உடல்நலம் மனநலத்துடன் நாட்டின் வளர்ச்சி பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
போதைப் பொருள் பயன்படுத்துவது தவறல்ல என்பது போல் சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. தங்களுடைய படிப்பு வேலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எதிர்காலம் தொடர்பான கவலைகள் அடுத்த முக்கியகாரணமாகும்.
இ – சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட் புகை நுகரும் புதிய பொருட்கள் அறிமுகம் இளம் வயதினரை சுலபமாக கவர்ந்துள்ளது. இவற்றால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்ற தவறான தகவல்களும் பரப்பப்பட்டுள்ளன.
இவையே இளம் வயதினர் போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆளாவதற்கு காரணங்களாக அமைந்துள்ளன. இவற்றில் இருந்து மீட்க வேண்டியது தற்போது முக்கிய பணியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
விளம்பரம்