திருவாரூர் நன்னிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மற்றும் கால சக்கரத்தை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தந்தை மகன் கைது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்கிற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் கண்ணன் வயது 53. இவரது மகன் சூர்யபிரகாஷ் வயது 23. இந்த நிலையில் இவரது வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலை மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான செப்பு நாணயங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா மற்றும் கும்பகோணம் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் இலக்குமணன் ஆகியோர் தலைமையில் இன்று அதிகாலை 10 மணியளவில் போலீசார் கண்ணன் வீட்டில் இருந்து சிலையை வாங்குவது போல் நடித்து வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருவாரூர்)

திருவாரூர்

திருவாரூர்

இதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தன்வந்திரி ஐம்பொன் சிலை 1 1/4 அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் வெண்கல சிலை மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முக்கால் கிலோ எடை உள்ள இரண்டு செப்பு நாணயங்கள் ஒரு காலச் சக்கரம் ஆகியவற்றைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சூரிய பிரகாசிடம் நடத்திய விசாரணையில் மன்னார்குடி திருமைக்கோட்டையில் அகஸ்தியர் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த கோவிலை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் சிலை மற்றும் செப்பு நாணயங்களை வாங்கி விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.இந்த சிலைகள் மற்றும் செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் என தெரிகிறது.

மேலும் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து மன்னார்குடியில் சிலை விற்பனைக்காக கொடுத்த மாரியப்பன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்த உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறையினர் தெரிவித்தனர்.

செய்தியாளர்: கு.ராஜசேகர் (திருவாரூர்)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link