கோடையின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. மே 29ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதுவே, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் என்று குறிப்பிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 117 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என தெரிகிறது. இந்தக் காலத்தில் குழந்தைகள், முதியோர், பெண்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோர் நண்பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

இதையும் படிங்க; Tamil Live Breaking News : மனோபாலா உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி

அதிக தண்ணீர் பருக வேண்டும் எனவும் நீர் சத்து பழங்களை சாப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வெளியே செல்லும்போது கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link