வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த நட்சத்திரங்கள் மீது, தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனால் டில்லி ஜந்தர் மந்திரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மீண்டும் கடந்த ஏப். 23-ல் மல்யுத்த வீரர்கள் போட்டியில். தொடர் போராட்டம் காரணமாக பூஷன் சரண் சிங் மீது டில்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட இரு வழக்குகள் பதிந்தனர்.
நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென சில நபர்கள் போராட்டக்காரர்களிடம் அத்துமீறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு வன்முறை சம்பவம் நடந்தது. சீருடை அணியாத டில்லி போலீசார் எனவும், அவர்கள் அனைவரும் மது அருந்தி விட்டு வந்து தாக்குதல் நடத்தியதாக மல்யுத்த நட்சத்திரங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது செய்யவில்லை
டில்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு டில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது சுவாதி மாலிவால் கூறினார்: எனது கடமை என்பதால் மீண்டும் மல்யுத்த வீரர்களை சந்திக்க வந்தேன். மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் தாங்கள் சித்திரவதை செய்ததாக என்னிடம் கூறினார்கள். மேலும் குடிபோதையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்களின் பாதுகாப்பு குறைபாடு குறித்து நான் கவலைப்படுகிறேன். டில்லி போலீசார் பிரிஜ் பூஷனை ஏன் பாதுகாக்கிறது?. டில்லி போலீசார் ஏன் அவரை கைது செய்யவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மல்யுத்த வீரர் ராஜ்வீர் கூறினார், குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் தர்மேந்திரா எங்களுடன் தகராறில் ஈடுபட்டார். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட், அவர்கள் அப்படி நடத்தப்படும் குற்றவாளிகள் அல்ல. நீங்கள் எங்களைக் கொல்ல வேண்டும், எங்களைக் கொல்லுங்கள் எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
விளம்பரம்