நேற்று மொஹாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த இருவரும் கடந்த முறை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மோதியபோது பஞ்சாப் வெற்றி பெற்றது. அப்போது பஞ்சாப் அணியின் ட்விட்டர் அட்மின் சில பல போஸ்ட்களை போட அது பல மும்பை ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. மொத்த வன்மத்தையும் சேகரித்து வைத்து இந்த போட்டிக்காக காத்திருந்தனர் மும்பை ரசிகர்கள். ரசிகர்கள் ஒரு பக்கம் சண்டை போட்டுக் கொண்டாலும் தவான் மற்றும் ரோகித் இருவரும் ஜாலியாக இருந்தனர். எந்த அளவுக்கு என்றால்,

பந்து வீச ஆரம்பித்தது மும்பை. பிரண்ட்ஸ் படத்தில் “இப்போ எத ஒடச்சீங்க” என்று கேட்டதற்கு “அதே தான்…அதே தான்” என்று ஆதங்கப்படும் வடிவேலுவின் கதை தான் நேற்று மும்பை பந்து வீச்சுக்கும் நடந்தது. வேகமாக ஒரு விக்கெட் – சாவ்லா தனியாக வேறு பிட்ச்சில் பந்து வீசுவது போல சிறப்பாக வீசுவது – மற்ற எல்லாரும் சேர்ந்து பாரி வள்ளல் பரம்பரையாய் மாறி ரன்கள் தருவது. இதுதான் இந்த ஆண்டின் மும்பையின் பவுலிங். ஜெராக்ஸ் எடுத்தது போல நேற்று இதே தான் நடந்தது. அர்ஷத் கான் பிரப்சிம்ரனை வேகமாக அவுட் ஆக்கினார். அதன் பின் சாவ்லா, தவான் மற்றும் ஷார்ட்டை வெளியேற்றினார். அதன் பின் எப்போதும் கடைசியாக வரும் ஜித்தேஷ் மும்பை பந்துவீச்சை பார்த்ததும் இன்று வேகமாக வந்து விட்டார்Source link