புற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் மையம் அமைக்கப்பட்டுள்ளது, பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கை கழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி, 24 சதவீத நோய்த்தொற்று கை கழுவாததால், தெரியவந்துள்ளது. நல்ல முறையில் கை சுகாதாரம் பாதுகாத்து வந்தால் 70 சதவீத உயிர் பாதிப்புகளை தடுக்க முடியும்.

உங்கள் நகரத்திலிருந்து(ஈரோடு)

ஈரோட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு, ராணிபேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் கண்டறியும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் சுகாதார வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு எதிரான கருத்துகள் சித்த மருத்துவ சட்ட மசோதாவில் இடம்பெறவில்லை. ஏற்கனவே குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

ஆளுநரின் செயலருக்கு 7 முறை கடிதம் அனுசரிக்கப்பட்டது அவர், “பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பவர்தான் வேந்தராக உள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களை அரசுதான் நிர்வகித்து வருகிறது. அந்த வகையில் முதல்வரை வேந்தராக நியமிக்கப்படுவார். 2013 லேயே தமிழ்நாடு இசைக் கழக வேந்தராக முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

செய்தியாளர்: பாபு

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link