விருதுநகர் மாவட்டம் இயக்கிவில்லிபுத்தூர் பகுதியில் உடலுக்கு பலவித நன்மை கருப்பட்டி இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பனை மரத்தில் இருந்து வரக்கூடிய பதநீர் கொண்டு தயாரிக்கப்படும் பனை வெல்லம் அல்லது கருப்பட்டி என்றழைக்கப்படும் ஒரு இனிப்புப் பொருள் தமிழ்நாட்டில் பனைமரங்கள் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தயாரிக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இயற்கை முறையில் ரெடியாகும் கருப்பட்டி

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை இயற்கை சுழல் நிறைந்த கருப்பட்டி தயாரிப்பு மற்றும் பனை பொருட்கள் தயாரிப்பில் பனைமர தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இயற்கையான முறையில் கருப்பட்டி தயாரிப்பைப் பற்றி அறிந்து கொள்ள, கருப்பட்டி காய்ச்சி வரும் பார்வதி-சிங்கராஜா தம்பதியரை சந்தித்த போது, ​​பார்வதி கருப்பட்டிதயாரிப்பு பற்றி நமக்கு விளக்கினார்.

கருப்பட்டி என்பது வெறும் பதநீரை கொண்டு தயாரிக்கப்படும் பொருள் என்பதால், அதிகாலையிலேயே பனை மரத்தில் ஏறி பதநீர் எடுத்து , அதை பெரிய பாத்திரத்தில் ஊற்றி சுண்ட காய்ச்சி அதில் கிடைக்கும் பாகை காய் வைத்து கருப்பட்டி தயாரித்து வருகின்றனர். இந்த கருப்பட்டி தயாரிக்கும் நாள் முழுவதும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கிலோ வரை கருப்பட்டி தயாரித்து வருவதாகவும், ஆனால் கிலோ 280 க்கு அரசாங்கம் எடுத்து வரும் நிலையில் வேலைக்கேற்ற லாபம் இல்லை என்றாலும் பாரம்பரிய தொழிலை பார்க்க வேண்டும் என்பதற்காக இதை செய்து வருகிறோம் என்கிறார் பார்வதி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே பதநீர் கிடைக்கும் அதனால் அந்த மாதங்களில் மட்டுமே கருப்பட்டி காய்ச்ச முடியும் மற்ற நாட்களில் வேறு வேலைக்கு சென்று தான் வாழ்வை ஓட்டி வருவதாக தெரிவித்த பார்வதி பாத்திரத்தில் பதநீர் சுண்ட கொதிக்க அதை கவனிக்க சென்றுவிட்டார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link