காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகுவதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. கடந்த வாரம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயன்ற லக்னோ அணியின் கேப்டன் கே. எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். மேலும் புதன்கிழமை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் விளையாடவில்லை அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த நிலையில் கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்துள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் சொதப்பி வரும் ராகுல் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்றார். மேலும் அவரது ஸ்ரைக் ரேட் மிகவும் மேதுவாக உள்ளதால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இருப்பினும் ராகுல் பங்களிப்பு செய்தாலும், கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்ட ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.கே.எல்.ராகுல் விலகவுள்ளதால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த போட்டியை வழிநடத்திய க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் குறித்து அனைத்து அப்டேட்டுகளை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

மேலும் கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் காயத்தால் விளையாடுவது சந்தேகம் எழுந்த நிலையில் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக விலகியிருப்பதால் வீரரை தேர்வு செய்ய பிசிசியின் தேர்வு குழு மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link