மத்தியப் பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஹோனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெபா கிராமத்தில் நடந்த சம்பவத்தில், தீர் சிங் என்பவருக்கும், கஜேந்திர சிங் என்பவரின் குடும்பத்துக்கும் இடையே நீண்டகால நிலத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

6 பேர் சுட்டுக் கொலை - மத்தியப் பிரதேசம்

6 பேர் சுட்டுக் கொலை – மத்தியப் பிரதேசம்

மேலும் இரண்டு பேர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இது குறித்துப் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராய் சிங் நர்வாரியா, “2013-ம் ஆண்டு தீர் சிங்குக்கும், கஜேந்திர சிங்கின் மகன்களுக்கும் இடையே காலி நிலத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது நாளடைவில் தகராறாக மாறி, இரு குடும்பங்களுக்கிடையேயும் `பகை’ ஏற்பட்டிருக்கிறது.Source link