புதுச்சேரி: “கல்வியையும், மருத்துவத்தையும் கட்டணமில்லாமல் வழங்க வேண்டும். இதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாடல்” என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவன ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகை உயர் சிகிச்சைக்கான கட்டணம் வசூலிக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும், ஏழை நோயாளிகள் நேரிட்டால் அவர்கள் உடலைக் கொண்டு செல்ல வேண்டிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்திலிருந்து பிரசவத்துக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்பாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.