அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை வாடி வாசல் தடுப்பு கட்டையில் மோதி உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் 4 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். நான்கு காளைகளுமே தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு வீரர்களை திணறடித்தது.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வடசேரிபட்டியில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை களம் இறங்கியது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளை வெளியே வரும் போது வாடிவாசல் கட்டையில் மோதியே மயங்கி விழுந்தது. உடனடியாக மினி லாரியில் மயக்கம் அடைந்த காளை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. இரண்டு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த கருப்புக் கொம்பன் காளை நேற்று உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து கருப்புக்கொம்பன் காளை உடல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்த காளையை கண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெற்று அவருடைய பண்ணை வீட்டிலேயே கருப்புக்கொம்பன் ஜல்லிக்கட்டு காளை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: சிதம்பரம் தீட்சிதர் குடும்ப சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை?- ஆளுநர் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு

இறந்த கருப்பு கம்பன் ஜல்லிக்கட்டு காளை தமிழகத்தின் 300-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு வீரர்களை களத்தில் திக்கு முக்காட செய்ததோடு யார் பிடியிலும் இதுவரை சிக்காமல் சென்றது அனைவரின் பாராட்டையும் பெற்றதாக இருந்தது. இதேபோன்று கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை தென்னலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கரின் பெரிய கொம்பன் காளை வாடிவாசல் கட்டையில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ர.ரியாஸ்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link