உச்சநீதிமன்றம் தடை விதித்த இருவிரல் பரிசோதனை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தைகள் மீது நடத்தக்கூடாது என தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ. “சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக அரசின் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடமாக பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், அதற்கு பொதுத் தீட்சிதர்கள் தரப்பில் பதில் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் சில தீட்சிதர்களுக்கு எதிராக சிறார் திருமணச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் பதியப்பட்டு அந்த வழக்குகளில் சில தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த வழக்குகளில் தேவையில்லாத ஒன்று எனவும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனையை சம்பந்தப்பட்ட சிறுமியிடம் கைது செய்துள்ளதாக காவல்துறை நேஷனல் சைல்ட் ரைட் கமிஷனுக்கும் தமிழக உள்துறை செயலாளர், தமிழக தலைமை காவல்துறை அதிகாரிக்கும் பொதுத் தீட்சிதர்கள் சார்பில் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(கடலூர்)

இதையும் படிங்க: நெல்லையில் நர்ஸ் கொலை.. நடுரோட்டில் கணவனே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கொடூரம்.

பொது தீட்சிதர்கள் எப்பொழுதும் இந்த அரசாங்கம் இயற்றிய சட்டத்தை மதிக்கின்றவர்கள் எனவும் அதை மீறி செயல்படவில்லை, கோவில் பூஜை செய்வதற்கு 21 வயதுடைய திருமணமான ஆண் தான் தேவை. தவிர 21 வயதுக்கு குறைந்த மைனர் சிறுமிக்கு சிறுவனுக்கோ திருமணமானால் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பொய்யான பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும் அது தவறு என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த மனித உரிமை மீறலும் குழந்தை உரிமை மீறலும் நடைபெற்று வருவதாகவும், அந்த வழக்குகளை தமிழ்நாடு காவல்துறை விசாரிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்.

இதையும் படிங்க: பேருந்தில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

பாலியல் வன்கொடுமை சட்டத்தில் இருவிரல் சோதனை நடத்தக் கூடாது என இருவிரல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சிறுமி வாழ்நாள் முழுவதும் தனக்கு நடந்ததை நினைத்து வருந்தக்கூடும் எனவே இதுபோன்ற கடுமையான சோதனைகளை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தற்போது தமிழக ஆளுநரே நடந்த விஷயத்தை பொதுவெளியில் சொல்வதால் இனிமேல் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைகளை காவல்துறை தவிர்க்கும் என்றும் காவல்துறை மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என வழக்கறிஞர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link