திருநெல்வேலி – செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில் நேரம் 7ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நெல்லை – பாலக்காடு இடையே இயக்கப்படும் (பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்) நெல்லை சந்திப்பில் இரவு 11.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சேரன்மகாதேவிக்கு 11.44, அம்பைக்கு 11.55 மணிக்கு கீழக்கடையத்துக்கு 12.08 மணிக்கு வந்தடைகிறது.
தென்காசி செங்கோட்டைக்கு வழக்கமான நேரத்திற்கு வந்து செல்லும். மறுமார்க்கத்தில் பாலக்காட்டிலிருந்து நெல்லைக்கு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டைக்கு அதிகாலை 2.55 மணிக்கு பதிலாக 2.40 மணிக்கு வந்து 2.45 மணிக்கு புறப்படுகிறது. இதேபோல் பாவூர்சத்திரத்துக்கு 3.05 மணிக்கும் அம்பைக்கு 3.25 மணிக்கும் சேரன்மகாதேவிக்கு 3.38 மணிக்கு வந்து நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக 4.40 மணிக்கு வந்து சேருகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)
இது தவிர காலை 7 மணிக்கு புறப்படும் (நெல்லை செங்கோட்டை பாசஞ்சர் சிறப்பு ரயில்) வழக்கம் போல் புறப்பட்டு 10 நிமிடங்கள் முன்னதாக 9.05 மணிக்கு செங்கோட்டையை சென்று அடைகிறது நெல்லையில் காலை 9.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயில் இனிமேல் காலை 9.45 மணிக்கு புறப்பட உள்ளது இந்த செங்கோட்டைக்கு 11.50 மணிக்கு புறப்பட உள்ளது.
மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரயில் வழக்கமான நேரத்தில் புறப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக காலை 4.10 மணிக்கு செங்கோட்டைக்கு செல்கிறது மாலை 6.15 மணிக்கு புறப்படும் வழக்கம் ரயில் போல் புறப்பட்டு 15 நிமிடங்கள் முன்னதாக அதாவது இரவு 8.20 மணிக்கு செங்கோட்டைக்கு செல்கிறது இதையொட்டி உள்ள ரயில் நிலையங்களுக்கும் இந்த ரயில்கள் வந்து செல்லும் நேரம்.
இதேபோல் செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் ரயில் நிலைய சந்திப்பு வழக்கம் போல் காலை 8.50 மணிக்கு வரும் ஆனால் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னதாக புறப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்படும் ரயில் 10 நிமிடங்கள் முன்னதாக நெல்லை சந்திப்பு மதியம் 12.15 மணிக்கு வருகிறது.
இதை போல் பிற்பகல் 2.55 மணி புறப்படும் ரயில் நிலைக்கு 20 நிமிடங்கள் முன்னதாக அதாவது மாலை 5 மணிக்கு வந்து சேர்கிறது. மாலை 5.50 மணிக்கு வழக்கம் போல் கூறப்பட்டு 5 நிமிடங்கள் முன்னதாக நிலைய இரவு 8.05 மணிக்கு வந்துவிடுகிறது. இதையொட்டி உள்ள ரயில் நிலையங்களில் ரயில்கள் வழக்கத்தை விட சில நிமிடங்கள் முன்னதாக வந்து செல்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு மதியம் 11.50 மணிக்கு புறப்படும் ரயில் இனிமேல் 12.10 மணிக்கு புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு மதுரைக்கு செல்கிறது. (செங்கோட்டை கொல்லம் ரயில்) பகல் 11.35 மணிக்கு பதிலாக 12.35 மணிக்கு புறப்பட உள்ளது. இந்த ரயில் மாலை 4.35 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: