விருதுநகர் கட்டையபுரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.பி.கணேசன். இவர் சொந்தமாக தாய் பதிப்பகம் என்ற புத்தக பதிப்பகம் நடத்தி வருகிறார். புத்தகதாரரான இவர் எண்ணற்ற புத்தகங்களை வாசித்து தற்போது மற்றவருக்கு பயன்படும் வகையில் புத்தகங்களை வைத்து நூலகம் உருவாக்கியுள்ளார்.

விருதுநகர் கட்டையபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.கணேசனின் சொந்த நூலகமான தாயம்மாள் நூலகத்தில் அறிவியல், கலை, இலக்கியம் என துறை சார்ந்து 2 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அந்த நூலகத்திற்கு மறைந்த தனது அம்மாவின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரான தாயம்மாள் என்ற பெயரிலேயே அந்த நூலகத்தை நடத்தி வருகிறார்.

விருதுநகரில் தாய்க்காக மகன் எழுப்பிய நூலகம்

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

தனது அம்மா தான் தனக்கு சிறுவயதில் இருந்தே ரோல் மாடல், பெரிதாக படிக்கவில்லை என்றாலும் கூட குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகித்து, தன்னையும் என் உடன் பிறந்தோரையும் வளர்த்து ஆளாகியதாக அவர் தெரிவித்தார். அதனாலே அம்மா மீது எப்போதும் பாசமும் மரியாதை இருக்கும். அதனால் தான் அவர் பெயரில் இந்த நூலகத்தை தொடங்கியதாக கணேசன் பேசி முடிக்கும்போது அவரது கண்கள் கலங்கி இருந்தன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புத்தகம் படிக்க தனியாக நூலகம் உருவாக்கியது ஒரு பக்கம் பாராட்ட கூடிய ஒன்று எனினும் அதை விட இன்றைய இளம் தலைமுறையினர் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது பெற்றோரை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்பது தான்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link