கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரையில் உடல்தானம் செய்ய விரும்பிய மூதாட்டியின் உடலை பெற வருவாய்துறையினர் காலம் தாழ்த்தியதால் மருத்துவமனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை வயலிவிளை பகுதியை சேர்ந்தவர் பாலையன், மனைவி லலிதா (73), மூத்த மகள் ஷீஜா உடன் வசித்து வருகிறார். மூதாட்டி லலிதா ஏற்கனவே தனது உடலை உடல்தானம் செய்யவேண்டும் என்ற விருப்பத்தை உறவினர்களிடம் தெரிவித்திருந்தும் உறவினர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூதாட்டி லலிதாவின் உடல்நிலை குன்றிய நிலையில் உடல்தானம் செய்யவேண்டுமென தனது விருப்பத்தை தொடர்ந்து வலியுறுத்தவே மூத்தமகள் ஷீஜா தனது கணவர் சந்திரனுடன் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று உடல்தகுதிக்கான விண்ணப்பத்தை கடந்த 27ஆம் தேதியன்று திற்பரப்பு வருவாய் கிராமத்தில் ஒப்படைத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
ஆனால் வருவாய்துறையினர் இந்த மனுவை கிடப்பில் போட்டுள்ளனர். இந்த நிலையில் மூதாட்டி லலிதா இன்று உயிரிழந்தார். ஆனால் அரசு தரப்பில் உடல்தானத்தை மறுத்துள்ளனர். அதேநேரத்தில் உறவினர்கள் வருவாய்துறையினரின் அலட்சியம்தான். இந்த பிரச்சினைக்கு காரணம் எனவும் பொதுவாக உடல்தானம் செய்ய அரிதிலும் அரிதாகவே சிலர் முன்வருவர். மூதாட்டி லலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மூதாட்டியின் உடலை தானம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து நாளை வரை அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: