ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.மேலும், சரணாலயம் போன்ற ராம்சார் அங்கீகாரம் பெற்ற இடங்கள் உள்ளதால், இத்தனை சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர். இப்பகுதிகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களை பிளாஸ்டிக் போன்ற கழிவுகளில் இருந்து பாதுகாக்க ஏர்வாடியில், தனுஷ்கோடியில் உள்ளது போன்று பிளாஸ்டிக் சோதனை சாவடியானது தொடங்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி வனத்துறை சார்பில் நடந்த பிளாஸ்டிக் சோதனை

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

இதையடுத்து, இந்த பிளாஸ்டிக் சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருபவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு பாதிப்பும் தராத மஞ்சள் பைகள் வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், 4 சக்கர வாகனத்திற்கு 20 ரூபாய், கனரக வாகனத்திற்கு 50 ரூபாய் கட்டணங்கள் வனத்துறையினர் சார்பில் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பிளாஸ்டிக் இல்லாத ஏர்வாடியை உருவாக்க புதிய முயற்சி எடுத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link