அறிவியல் வரலாற்றில் முதன்முறையாக…
இது வரை, இரு நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இணையத்தில் இருபது முறைக்கும் மேலாக நிகழ்வு ஆராய்ச்சியாளர்கள் பதிவு. இந்த நிகழ்வு சிவப்பு நோவா (red novae) எனக்காக. நட்சத்திரம் ஒன்றை ஒன்று கவர்ந்து இணையும் போது அதிக ஒளி உண்டாகும். ஆனால் ஒரு நட்சத்திரம் ஒரு கோலை விழுங்கும் நிகழ்வைப் பதிவு செய்வது இதுவே முதல் முறை. மேலும் இந்த நிகழ்வின் போது சிறிய அளவிலேயே ஒளி உண்டாகிறது.
`ஒரு நட்சத்திரம் தன்னைச் சுற்றிவரும் கோளை விழுகிறது’ என்ற உண்மை டாக்டர் கிசால் பதிவு செய்த இந்த குறும்படம் மூலமாக இந்த உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. நிச்சயம் இந்த ஆராய்ச்சி எதிர்கால சந்ததிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
சூரியன் வெள்ளிக் கோளை விழுங்கினால் எப்படி இருக்கும்? இந்த கேள்வி ஆராய்ச்சியாளர்களைத் துளைத்து எடுத்தது. அவர்களின் கற்பனைக்கு அவளுக்கு ஏற்றார் போல நடந்துள்ளது இந்த நிகழ்வு.
இந்தக் காட்சிகளை பார்த்தவுடன் இதற்கு முன் இப்படி நடந்ததா..? நாம் வசிக்கும் பூமியும் சூரியனைச் சுற்றிவரும் ஒரு கோள் தானே. சூரிய குடும்பத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்குமா என்ற கேள்வி எழுகிறதா? அதை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சூரியன் மாதிரி சுற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள்…
இந்த பிரபஞ்சம் விசித்திரமானது. கற்பனைக்கு எட்டாத வகையில் பறந்து விரிந்து. மேலும் இங்கு எல்லாமே தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. பூமி தன்னைத்தானே மணிக்கு 1670 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு வேகத்தில் தன்னைத்தானே சுற்றும் பூமி சூரியனையும் சுற்றி வருகிறது. இதன் வேகம் மணிக்கு 107,208 கிலோமீட்டர் ஆகும். இந்த வேகத்தில் பயணித்தால் நாம் சந்திரனை நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம். நம் பயண வேகம் இத்துடன் நிற்கவில்லை. சூரியன் நாம் வாழும் பூமியை மட்டும் அல்ல இதன் ஆளுமைக்கு உட்பட மற்ற கிரகங்களையும், அவைகளின் நிலங்களையும், சுற்றியுள்ள கற்களையும் தூசிகளையும் இழுத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது. சூரியனின் இந்த பயண வேகம் மணிக்கு 8 லட்சத்து 28 ஆயிரம் கிலோமீட்டராகும்.
ஆக, “நாம் குறட்டை விட்டுத் தூங்கினாலும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்பது உண்மை. பூமி சூரியனைச் சுற்றி வர ஒருவருடம் எடுத்துக்கொள்கிறது என அறிவோம். “இந்த சூரியன் தலை தெறிக்க எதைச் சுற்றுகிறது?” என்ற கேள்வி சுவையானது.