தூத்துக்குடியில் டாஸ்மாக்கில் மது அருந்திய கட்டிட தொழிலாளி மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் பாண்டவர்மங்கலம் அருகே வரும் டாஸ்மாக் பாரில் வெள்ளிக்கிழமை இரவு பாண்டவர்மங்கலத்தினை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் என்பவர் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவரது அருகே மது அருந்திக்கொண்டு இருந்த 4 பேரில் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த மது பாட்டிலை கொண்டு சக்திவேல் தலையில் ஓங்கி அடித்தார். மேலும் 3 பேரும் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அங்கிருந்த சேரை எடுத்து தாக்கினர்.

தொடர்ந்து தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்ததை அறிந்ததும் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையெடுத்து காயமடைந்த சக்திவேலை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது , சக்திவேல் மீது தாக்குதல் நடத்திய கும்பல் போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரையும் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்தவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சக்தி சிகிச்சை பெற்று வருகிறார். இப்பிரச்சினை குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)

தூத்துக்குடி

தூத்துக்குடி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாண்டவர்மங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனார் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் புகைப்படங்களை சிலர் அவமரியாதை செய்தனர். அந்த பிரச்சினையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சக்திவேல் மற்றும் சிலர் போராட்டத்தினை முன்னெடுத்தனர். அந்த பிரச்சினை காரணமாக சக்திவேல் தாக்கப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை தாக்க வந்தவர்கள், தன்னை மட்டுமின்றி, ஒரு காவலரையும் வெட்டி முயன்றதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமின்றி, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தாக்குதலுக்கான சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link