சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 6) சவரன் ரூ.664 குறைந்து, ரூ.45,536-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, குறைந்துள்ளது. அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் கடந்த மாதம் 22, 23 ஆகிய இரண்டு நாட்களாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் புதன்கிழமை அதிரடியாக ரூ.728 உயர்ந்தது. தொடர்ந்து வியாழக்கிழமையும் சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளிக்கிழமை சவரன் ரூ.46,200க்கு விற்பனையானது.
இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமத்திற்கு ரூ.83 குறைந்து ரூ.5,692-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.664 குறைந்து ரூ.45,536-க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,296-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.30 காசுகள் குறைந்து ரூ.82.40-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.82,400-ஆக இருக்கிறது.