தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயிலில் சித்திரை மாதம் பௌர்ணமி நிகழ்வை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அகத்தியர் கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மகாலட்சுமி திருக்கோயில் :-
தேனி மாவட்டம் பெரியகுளம் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் அகத்தியர் கை பிரதிஷ்டை செய்யப்பட்டு , அகத்தியர் கைக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன .
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இந்த கோயிலில் உள்ள நந்தீஸ்வரன் சிலைக்கும், நாகராஜர் சிவனுக்கும் ஒவ்வொரு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோயில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர். ஆன்மீக சிறப்பு நாட்களிலும், பிரதோஷ நாளிலும் நடைபெறும் அபிஷேக வழிபாட்டை காண பல்வேறு பகுதிகளில் மக்கள் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில் சித்திரை மாதத்தை முன்னிட்டு மகாலட்சுமி கோயிலில் உள்ள அதிகார நந்தீஸ்வரன் சிலைக்கும், நாகராஜர் சிவனுக்கும் ஐந்து வகை சாதங்களை கொண்டு பால் தயிர் பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் அகத்தியரின் கை இந்த கோயிலில் புதிதாக 16 அடி அகலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அகத்தியர் கையில் பல சக்கரங்கள் கல்லில் நிர்மாணம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக இப்பகுதி மக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு பெற வேண்டும் என்பதற்காக அகத்தியர் கை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கோயில் அர்ச்சகர் கூறினார் . பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டி செய்யப்பட்ட அகத்தீரின் கையை வழிபட ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: