நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பூங்கா அருகே உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டுள்ளது . இந்த கண்காட்சியை காண பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக 25 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்காவின் நுழைவுவாயில், ஆயிரம் கிலோ எடை கொண்ட பல்வேறு காய்கறிகள் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் இருந்து உள்ளே சென்றவுடன் குடைமிளகாய், கத்திரிக்காய், கேரட் தக்காளி உள்ளிட்ட ஏராளமான காய்கறிகளின் அலங்காரம் செய்யப்பட்ட ஊட்டி 200 என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

கோத்தகிரி காய்கறி கண்காட்சி

இதையும் படிங்க : அரிசி கொம்பன் யானை நடமாட்டம்.. மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை..

மேலும் இந்த நேரு பூங்காவில் ஐ லவ் கோத்தகிரி என்ற செல்பி பாய்ந்தும் அமைக்கப்பட்டுள்ளது . அடுத்த கட்டமாக சுற்றுலா பயணிகள் விழாவின் சிறப்புகளை மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய பேனர் வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

மேலும் தோட்டக்கலைதுறை சார்பாக ஏராளமான கத்தரிக்காய் மற்றும் மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை வைத்து கரடி பொம்மை அருமையாக தயார் செய்யப்பட்டுள்ளது. அரசாணி பூசணிக்காய் கேரட், பீட்ரூட் மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவைகளை வைத்து மருதமலை தேர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் முள்ளங்கி மற்றும் கத்திரிக்காயை வைத்து சேவல் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.

கோஸ் மற்றும் சேனைக்கிழங்கு ஆகியவற்றை வைத்து பவானிசாகர் அணையின் தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். பின்னர் முற்றிலுமாக கேரட்டை வைத்து ஒட்டகச்சிவிங்கி உருவத்தை வடிவமைத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு காய்கறி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சிவலிங்கம் வீணையுடன் இருப்பது போல் உள்ளது.

பூங்காவின் புல்வெளி மைதானத்தில் குடைமிளகாய் மற்றும் பஜ்ஜி மிளகாயை வைத்து மக்காச்சோளம் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் பாகற்காய் வைத்து அமைக்கப்பட்டுள்ள முதலை உருவம், கத்திரிக்காயை வைத்து யானைகள் வரிசையாக செல்வது மற்றும் பூசணிக்காய் மற்றும் பல்வேறு காய்கறிகளை கொண்டு டிராகன் வடிவிலான பொம்மையை வடிவமைத்திருப்பது சுற்றுலா பயணிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் தோட்டக்கலைத்துறை சார்பாக ஆங்காங்கே குடில்கள் அமைக்கப்பட்டு காய்கறி விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link