கோடை விடுமுறையை மாற்ற பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெற்றோர்களும் குழந்தைகளும் இந்தாண்டு கோடை விடுமுறையை பயனுள்ள வகையிலும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பதைப் பற்றிய ஆய்வை குழந்தைகளோடு பெற்றோர்கள் மேற்கொள்ளுங்கள். குழந்தைகளின் ஆர்வத்தை முதலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எந்த கல்லூரியில் படிக்கலாம் அதற்கான தேர்வு கட்டணம் குறித்து ஆய்வு செய்யுங்கள், மற்ற கல்வி நிறுவனங்களுடன் அதை ஒப்பிட்டு பாருங்கள், தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல் சேர்க்கைக்கான கட்டணங்களை தயார் செய்யுங்கள்.

ஒரு குழந்தையின் முதல் சொத்து அவர்களின் உடலே என்பதை மறவாதீர்கள். இக்கோடை விடுமுறையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துங்கள். கீரைகள், காய்கள், பழங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் என்று தினம் தினம் நல்ல ஆரோக்கிய உணவை சமைத்து கொடுங்கள். பள்ளி திறந்த பிறகு அதுவே அவர்களுக்கு பழக்கமாக மாறிவிடும்.

உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)

உங்கள் குழந்தையோடு அதிக நேரம் செலவிடுங்கள். அவர்களிடம் தன்னம்பிக்கையான வார்த்தையை அதிகம் பயன்படுத்துங்கள். அவர்களை குறை கூறி அடுத்தவீட்டு குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தியும் பேசாதீர்கள். எல்லா குழந்தைகளும் திறமையானவர்களே என்பதை மறவாதீர்கள். ஊக்கப்படுத்தி பேசுங்கள், குழந்தைகளை சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்லுங்கள், வெளியூர் செல்ல முடியவில்லை என்றால், நம் ஊரில் உள்ள சுற்றுலா தளங்களை அழைத்து செல்லுங்கள், அவர்கள் எங்கு செல்ல ஆசை படுகிறார்களோ அங்கு செல்லுங்கள்.

தாத்தா, பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். விடுமுறையை அவர்கள் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்று பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது ஆதலால் அவர்களை வீட்டில் உள்ளவர்களின் மேல் உள்ள நம்பிக்கையில் இருந்து செல்ல வேண்டாம். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் குற்றவாளிகள் நன்கு தெரிந்த நபர்களாகவே உள்ளனர். ஆதலால் குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு செல்லும்போது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க குழந்தைகள் நீர்நிலைகளுக்கு செல்கின்றனர். ஆதலால் அவர்கள் எங்கு செல்கிறார்கள் யாருடன் செல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு விடுமுறையின்போது பொழுதை போக்குவதற்காக செல்போனிற்கும், டிவிக்கும் அடிமை ஆக்காதீர்கள். பெண் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைப்பது, அவர்கள் மேற்படிப்பு தொடர்வது, மேலும் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பெற்றோர்கள் அறிந்து செயல்பட வேண்டும்.

கோடை விடுமுறையில் குழந்தைகள் பாதுகாப்புடன் இருங்கள். நீச்சல் தெரிந்தாலும், தெரியவிட்டாலும் பெரியவர்களின் துணையில்லாமல் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம். வெயிலின் தாக்கம் அதிகம் என்று நீர்நிலைகளுக்கு சென்று ஆபத்தில் மாட்டி கொள்ளாதீர்கள். தற்காப்புக் கலைகள், சிலம்பம் மற்றும் கராத்தே உள்ளிட்ட பல தற்காப்புக் கலைகள் உள்ளன, இவற்றில் ஏதேனும் ஒன்றை விருப்பத்துடன் கற்றுக் கொள்ளுங்கள். செல்போன் எந்த விதத்திலும் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவியாக இருக்காது. எனவே செல்போனிற்கு அடிமையாகாதீர்கள். பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். யாரும் உங்களை தொட்டுப் பேச அனுமதிக்காதீர்கள். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். பாக்கெட் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஓவியம் வரையுங்கள். கட்டுரை கவிதை எழுதுங்கள். புத்தகம் வாசியுங்கள்.

வளரிளம் மாற்ற பருவங்களை முறையாக கையாளுங்கள். வளரிளம் பருவங்களில் ஏற்படும் பருவ மாற்றங்களை முறையாக கையாண்டு, அதனை கடந்து இலக்கை நோக்கி செல்பவர்களே வரும்காலங்களில் சாதனையாளர்களாக உருவாக முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link