கன்னியாகுமரி பல்வேறு மாவட்டங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் கன்னியாகுமரி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் குழித்துறை பகுதியிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக மார்த்தாண்டம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பம்மம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியபோது அங்கு 2 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அவர்களுடன் 4 பேர் இருந்தனர். இதையடுத்து 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஒருவர் பெங்களூரையும், மற்றொருவர் தஞ்சாவூரையும் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரியவிளையைச் சேர்ந்த மர வியாபாரியான சுனில் அப்பலோஸ்(வயது 45), குழித்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான நாராயணன் நாயர்(59) என்பது தெரியவந்தது. சுனில் அப்பலோஸ் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
இதையும் படிங்க: ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பா…? டி.டி.வி.தினகரன் விளக்கம்
மேலும், அவர் மர வியாபாரி என்பதால் தனக்கு தெரிந்த வியாபாரிகள் முக்கிய விஐபிக்களை வீட்டுக்கு அழைத்து வந்து பெண்களிடம் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக வாட்ஸ் அப் குழுவை தொடங்கி முதலில் தங்களுக்கு தெரிந்த நபர்கள் முக்கிய வி.ஐ.பிக்களை வாடிக்கையாளர்களாக சேர்த்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பெண்கள் இருக்கும் இடத்துக்கு அங்கு வரவழைத்துள்ளனர். பணம் தராமல் ஏமாற்றி விடாமல் இருக்க கூகுள்பே மூலம் முதலில் பணம் பெற்று உறுதி செய்த பிறகுதான் அவர்களை நம்பியுள்ளனர். குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் வசூலித்துள்ளனர். ஒரு சிலர் ரூ.25 ஆயிரம் வரை கூகுள் பேட் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மீட்கப்பட்ட பெண்கள் இருவரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: