சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கும் வழக்கில் அரசு மருத்துவர்களை அச்சப்படுத்த இரு விரல் பரிசோதனை செய்ததாக தவறான கருத்தை தெரிவிப்பதாக அரசு மருத்துவ சங்க மாநிலத் தலைவர் கூறியுள்ளார்.
சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை செய்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் குறித்து பேசிய அரசு மருத்துவ சங்கத் தலைவர் சாமி நாதன், ‘கடந்த செப்டம்பர் மாதம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சதர்கள் அவர்களது குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். குழந்தை திருமணம் சம்பந்தமாக புகார்கள் வந்து அதன் அடிப்படையில் காவல் துறையினர் இரண்டு சிறுமிகளை, கடலூர் அரசு மருத்துவமனை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். கடலூர் மற்றும் சிதம்பரம் மருத்துவ மகப்பேறு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினர். அந்த மகப்பேறு மருத்துவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கினர்.
இந்த நிலையில் நேற்று திடீரென சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக வெளியான செய்தி ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இரு விரல் பரிசோதனை என்பது பல வருடங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட ஒன்று. இந்த நிலையில் இது போல் பரிசோதனை செய்யப்பட்டது என கூறுவது ஏற்புடையதல்ல.
உங்கள் நகரத்திலிருந்து(கடலூர்)
இந்த குற்றச்சாட்டை வைக்க காரணம் திருமண தடை சட்டத்தை மீறி குழந்தை திருமணம் செய்துள்ளார்கள். இதனை போலீசார் விசாரணை மூலம் வந்து மருத்துவர்கள் பரிசோதனை மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
மருத்துவர்கள் வழக்கு தொடர்பாக சாட்சியாக வருவார்கள்.
குழந்தை திருமணம் என்பது சமுதாய சீர்கேடாகும்.
அதற்கு எதிரான சட்டங்கள் இருந்தும் அது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மருத்துவர்கள் மீது இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கூறுவது அதற்கான தடங்கல்களை ஏற்படுத்துவது நல்லதல்ல. எனவே இது போன்ற சமுதாய சீர்கேடான குழந்தை திருமணம், பெண் குழந்தைகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தை பேசும் போது அதுவும் குறிப்பாக பொறுப்புகளில் இருப்பவர்கள் பேசினால் போதும் அறிக்கை வெளியிடும் போது என்ன நடந்தது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாறாக நிரூபிக்கப்படாத உண்மை இல்லாத விஷயத்தை பொதுவெளியில் பேசுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: