காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாகறல் ஏரி ரூ.2.69 கோடி மதிப்பில், புணரமைத்து கரைகள் பலப்படுத்துதல், வரத்து கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கின.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகறல் ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் முறைப்படுத்தப்படாத ஏரியாகும். இந்த ஏரிக்கும் செய்யாற்றின் மூலம் நீர்வரத்துப்பெறுகிறது. 3 மதகுகளுடன் சுமார் 266 ஏக்கர் பரப்பளவுடைய இந்த ஏரியின் மூலம் சுமார் 497ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் பெய்த கனமழையால் கரையில் அரிப்பு ஏற்பட்டு ஏரிக்கரைகள் பலவீனமாக உள்ளன. மதகுகளும் சேதமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மாகறல் ஏரியின் ஏரிக்கரைகளை அகலப்படுத்தி பலப்படுத்துதல், கரையை உயர்த்துதல், மதகுகளை சீரமைத்தல், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு ₹2.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாகறல் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி தொடக்கம்

இதையும் படிங்க : ஒவ்வொரு வீட்டிலும் குருவிக்கூடு..! சிட்டுக்குருவியை பாதுகாக்கும் கரிசல்பட்டி கிராம மக்கள்..!

இதனைத்தொடர்ந்து பழுதுபார்த்தல் புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் (RRR SCHEME) திட்டத்தின் கீழ் ₹2.69கோடி மதிப்பில் ஏரியில் மேற்கொள்ளப்படும் ஏரிக்கரைகளை பலபடுத்துதல், சீரமைத்தல், நீர் வரத்து கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் நீர் உள்வாங்குதல் உள்ளிட்ட பணிகளை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பணிகளை மழைக்காலம் முன்பே விரைவாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்வில் ஒன்றிய குழு துணைத்தலைவர் திவ்யபிரியா இளமது, ஒன்றிய செயலாளர் குமணன், செயற்பொறியாளர் நீள்முடியன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link