ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசி பந்தில் சிக்சர் அடித்த ஐதராபாத் வீரர் அப்துல் சமத் அந்த அணியை வெற்றி பெற வைத்தார். ந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களத்தில் இறங்கினர். 18 பந்துகளில் 2 சிக்சர் 5 பவுண்டரிகள் விளாசிய ஜெய்ஸ்வால் 35 ரன்கள் எடுத்தார் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த சஞ்சு சாம்சன் – ஜோஸ் பட்லர் இணை ரன் குவிப்பில் ஈடுபட்டது. 59 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் 4 சிக்சர் மற்றும் 10 பவுண்டரியுடன் 95 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சாம்சன் மற்றும் பட்லர் ஆகியோர் 2 ஆவது விக்கெட்டிற்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் எடுக்க ஹெட்மேயர் 7 ரன்களுடன் களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ராஜஸ்தான் அணி 214 ரன்களை குவித்தது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிசேக் சர்மா ஆகியோர் சன்ரைசர்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அன்மோல்ப்ரீத் 33 ரன்களும், அபிசேக் சர்மா 34 பந்தில் 55 ரன்களும் சேர்த்தனர். ராகுல் திரிபாதி 3 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுக்க விக்கெட் கீப்பர் கிளாசன் 2 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் 12 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டபோது அதை ராஜஸ்தானின் சந்தீப் சர்மா வீசினார். முதல் பந்தில் ஐதராபாத் அணியின் அப்துல் சமத் 2 ரன்கள் எடுக்க அடுத்த பந்தில் சிக்சர் பறந்தது. 3 ஆவது பந்தில் 2 ரன்களும், 4 மற்றும் 5 ஆவது பந்துகளில் தலா 1 ரன்னும் எடுக்கப்பட்டன.

கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டபோது அதை லாங் ஆஃப் திசையில் அப்துல் சமத் அடிக்க, பந்து கேட்ச் செய்யப்பட்டது. இருப்பினும், அதனை நோ பாலாக அறிவித்த நடுவர், அதற்கு ஃப்ரீ ஹிட் கொடுத்தார். இதனால் கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​சிக்சர் அடித்து சமத் அணியை வெற்றி பெற வைத்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:





Source link