நாமக்கல் மோகனூர்ரோட்டில், கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவாலயத்தில் வரும் 11ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மரவள்ளியில் ஒருங்கிணைந்த முறையில் மாவுப்பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இந்த பயிற்சியில் தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலையில், மரவள்ளி பயிர்களைத் தாக்கும் மாவூப்பூச்சிகள், அதன் வாழ்க்கை சுழற்சி மற்றும் புதிய ஓட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர்கொல்லிகளை ஒன்றிணைத்து மரவள்ளியில் மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்து தெளிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இந்த பயிற்சியில் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம்உள்ளவிவசாயிகள்முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மரவள்ளியில் மாவு பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி?
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பயிற்சிக்குபதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: