தனுஷ் நடித்த ‘3’, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதற்கான படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த சூழலில் ‘லால் சலாம்’ படத்தில் அவரது தோற்றத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. அதோடு அவர் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதையும் படக்குழு அறிவித்துள்ளது.

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நடிகை ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது.

செஞ்சி மற்றும் அத்தியூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Source link