ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலத்தைச் சேர்ந்த சஞ்சய் (19), கேசவர்தன் (19), அஜீஸ் (19), பைசுல்லா (19) ஆகிய 4 பேரும் கடந்த 7ம் தேதி காலை சித்தூரில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு வேளாங்கண்ணி வந்தனர். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தவர்கள் நேரிரவு வேளாங்கண்ணி கடற்கரையில் குளித்து கொண்டிருந்தனர், அப்போது கடலில் இருந்து வந்த வேகமான அலையில் 4 பேர் சிக்கி அலையில் அடித்து செல்லப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களது அலறல் சத்தம் கேட்ட உடன், வேளாங்கண்ணி உதவி கரங்கள் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை மீட்கும் பணியில் சேர்ந்தனர். இதில் சஞ்சய், கேசவர்தன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பைசுல்லா, ஆஜீஸ் ஆகிய இருவரும் கடல் அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் இறந்த நிலையில் இருவரது உடலும் கரை ஒதுங்கியது. அதன் பிறகு அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(நாகப்பட்டினம்)

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

இது குறித்து,வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேளாங்கண்ணியில் கடல் அலையில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பாலமுத்துமணி, வேளாங்கண்ணி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link