திருச்சி மாவட்டம் சிறுகனூர் உள்ள எம் ஆர் பாளையம் அருகே சேர்ந்த பிரசாத். இவர் செகனண்ட்-இல் லாரி வாங்கி தொழில் செய்வதற்காக லாரியை எடுத்து வந்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளார். அதன்பின்னர் லாரியை எடுத்து செல்லும்போது சமயபுரம் கரியமாணிக்கம் பிரிவு சாலையில் லாரி திடீரென டீசல் டேங்க் வெடித்ததில் லாரி தீ பிடித்து எரிந்தது.
இந்த தீ விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு தீயை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
மேலும் படிக்க… வெள்ளியங்கிரி மலையில் துணிகளை வீசுவதை நிறுத்துங்கள்.. பக்தர்களுக்கு வனத்துறை வேண்டுக்கோள்..!
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
இந்த தீ விபத்து லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி எரிந்தது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் உரிய நேரத்தில் காவல் துறையினர் வரவில்லை என லாரி ஓட்டுநர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: சே.கோவிந்தராஜ், திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.