ராமநாதபுரம் உள்ள 11 ஊராட்சி வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பணியாளர்களின் கோரிக்கைகளுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட உறுதி கணினி உதவியாளர் பணி வரன்முறை செய்தல், அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெறிச்சோடிய அலுவலகம்

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

மேலும், ஊரக வளர்ச்சி துறையில் இணை இயக்குநர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணையங்களையும் காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உள்ளூர் செய்திகள், ராமநாதபுரம்



Source link