சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் வேலூர் மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வேலூர் காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் மருத்துவ தம்பதியினர் பிரியம்வதா,  சுதர்சன் ராஜ் ஆகியோரின் மகள் ரேவா. இவர் வேலூர் காட்பாடி பகுதியில் உள்ள சிருஷ்டி சிபிஎஸ்இ பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பில் படித்தார்.

இன்று வெளியான சிபிஎஸ்இ தேர்வு முடிவில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(வேலூர்)

ரேவாவை பள்ளி தாளாளர், பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் இனிப்பு வழங்கி பாராட்டினர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாணவி ரேவா, “நான் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை, மருத்துவர் ஆவதற்காக நீட் தேர்வு எழுதி உள்ளேன். நான் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் பெற்றோரின் ஊக்கமே காரணம்” என தெரிவித்தார்.

செய்தியாளர்: செல்வம், வேலூர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link