நீலகிரி தற்போது மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியதை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் 18வது மலர் கண்காட்சி துவங்கியது.
அனைவரும் கவனத்தையும் ஈர்க்கும் ஈபில் டவர் சுமார் 35,000 மேற்பட்ட மலர்களால் அமைக்கப்பட்ட ஈபில் டவர் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பின்னர் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து ஹாக்கி பேட் வடிவம் மேலும் சிஎஸ்கே ரசிகர்களை ஈர்க்கும் விதமாக வைக்கப்பட்ட சிஎஸ்கே பேட் மற்றும் பால் உள்ளிட்டவை விளையாட்டுப் பிரியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பின்னர் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தினை ஊக்குவிக்கும் விதமாகப் பெண்மணி மஞ்சள் பை மற்றும் கூடையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் வடிவமானது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதன் அருகில் வைக்கப்பட்டுள்ள 2 யானை வடிவங்கள் மற்றும் முயல் ஒன்று மரத்தினைத் தாங்கி நிற்பது போல் உள்ள வடிவங்கள் அனைத்துமே ரோஜாவினாலே அமைக்கப்பட்டுள்ளன.
உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

உதகை ரோஜா கண்காட்சி
இதையும் படிங்க : குற்றாலத்துக்கு ட்ரிப் போறீங்களா? – அப்ப இப்படித்தான் நீங்க குளிக்கனும்..!
பின்னர் ஊட்டி 200 என்ற வாசகம், மலர்களால் ஆன மயில் வடிவம் பட்டாம்பூச்சி மற்றும் வீணை உள்ளிட்டவைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பூங்காவில் மலர்கள் சற்று குறைவாக இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு சற்று அதிருப்தி தரக்கூடியதாகவே அமைந்திருந்தாலும் இவ்வாறு அமைக்கப்பட்ட வடிவங்களைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
மேலும் மலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக இங்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன நிறுத்தக் கட்டணமாக பேருந்துகளுக்கு 150 ரூபாயும் சிற்றுந்துகளுக்கு 150 ரூபாயும் கார் மற்றும் ஜீப்புகளுக்கு 50 ரூபாயும் இருசக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்னர் பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50 சிறியவர்களுக்கு 25 ரூபாயும் புகைப்படக் கருவிக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பின்னர் நுழைவு வாயிலில் டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: