திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்து ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கான ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர், முன்னாள் மாணவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர் இடம் பெற்றுள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)
இந்தக் குழுவின் மூலம் உயர்கல்வியில் சேர ஆலோசனைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், இடைநின்ற மாணவர்களை மீட்பதற்கான பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும். இந்த குழு, மே 5ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

மாணவிகளுக்கு அறிவுரை கூறிய நெல்லை ஆசிரியர்கள்
இதுகுறித்து மாநில, மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதன்மை முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். இது தவிர, உயர்கல்வியில் எத்தனை விதமான படிப்புகள் உள்ளன, அதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய காணொலியை பள்ளிக்கல்வி துறை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
அதில், உயர் கல்வி படிப்புகள், தேசிய நுழைவுத் தேர்வுகள் சார்ந்து பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதை மாணவர்களுக்கு எடுத்துரைத்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை விலங்கியல் ஆசிரியர் முத்து சசிரேகா மற்றும் வணிகவியல் ஆசிரியர் செல்லகுமார் ஆகியோர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: