திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தந்தையின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அதிகாரிகளுக்கு தாலி, கம்மல், மூக்குத்தியை கழற்றி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இளநீர்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் திலகவதி. அவர் கணவனை இழந்துவாழ்ந்துவருகிறார். அவர் தனது தந்தையின் இறப்புச் சான்றிதழ் கேட்டு செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்துள்ளார். திலகவதியின் தந்தை கடந்த 1972-ஆம் ஆண்டு வருடத்தில் இறந்ததால் அப்போது இறப்பு பதிவு செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பரசுராமன் இறப்பு குறித்து ஓராண்டுக்குள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டதால் சான்றிதழ் வாங்குவது குறித்து ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்குள் தெரிவிக்கும்படி கடந்த வருடம் நவம்பர் மாதம் 30-ந்தேதி சார் ஆட்சியர் அலுவலகம் மூலம் செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(திருவண்ணாமலை)

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

இந்த நிலையில் அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுசம்பந்தமாக திலகவதி, சார் ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கேட்கும்படி அனுப்பி வைத்ததாகவும் வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று கேட்டால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சென்று கேட்கும் படி மாறி அலைக்கழித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மன வேதனை அடைந்த திலகவதி வருவாய்த்துறை அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தந்தையின் இறப்புச் சான்றிதழ் பெற முடியும் என்ற நோக்கத்தில் கணவன் இழந்த பிறகு தன்னிடம் இருந்த தாலி, கம்மல் மற்றும் மூக்குத்திகளை கழற்றி அதிகாரிகளுக்கு இறப்புச் சான்றிதழ் கேட்டுள்ளார். இந்த வீடியோ வெளியானதால் வருவாய்த்துறை அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுசம்பந்தமாக வட்டாட்சியர் வெங்கடேசனிடம் கேள்வி எழுப்பியபோது, ​​’கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே திலகவதியின் மனுவின் மீது விசாரணை நடத்தி அதற்கான பதிலை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அதோடு எங்கள் பணி முடிந்துவிட்டது என்றும் வட்டாட்சியர் தெரிவித்தார்.

சித்தராமையா மாஸ் லீடர்… எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை – கர்நாடகா தேர்தல் முடிவு குறித்து அண்ணாமலை கருத்து

இதுகுறித்து சார் ஆட்சியர் அனாமிகாவிடம் கேட்கும்போது, ​​’இறப்புச் சான்றிதழ் மனு மீதான விசாரணையில் மனுதாரரின் தகப்பனாரான பரசுராமனுக்கு மொத்தம் ஐந்து வாரிசுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆட்சேபனை உள்ளதா என விசாரணைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, இந்த வார இறுதிக்குள் திலகவதியின் மனுவுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: மோகன்ராஜ், செய்யாறு.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link