‘உறவு முடிஞ்சதுமே தூங்கிடுறாரே… ஏன்?’ – திருமணமான பெண்கள் மத்தியில் இருக்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. என்ன காரணம் என்று பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்.

”மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற உயிரினங்களும் உறவின்போது கிடைக்கிற மகிழ்ச்சிக்காகத்தான் செக்ஸில் ஈடுபடுகின்றன. உறவின்போது உச்சகட்டம் அடைந்தவுடனே, மனிதர்களின் மூளையில் இருந்து ஆக்ஸிடோசின், டோபமைன் போன்ற மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். இவைதான் அந்த மகிழ்ச்சிக்கு காரணம். இதில் ஆக்ஸிடோசின் ஹார்மோன், உறவுக்குப் பிறகு கொஞ்ச நேரம் கட்டிப்பிடித்தபடி பேச வேண்டும்; கொஞ்ச வேண்டும் என்பது போன்ற எண்ணங்களை பெண்களுக்கு ஏற்படுத்தும். ஆனால், ஆண்களுக்கு மூளையில் இருக்கிற தூக்க மையம்-ஐத் தூண்டி விட்டுவிடும். அதனால், உறவு முடிந்தவுடனே ஆண்களுக்கு ஆழமான தூக்கம் வந்து விடும். இது இயல்பான நிகழ்வுதான்.

உச்சகட்டம் அடையாத ஏற்கனவே கணவர் மீது கோபத்தில் இருப்பார்கள். உச்சகட்டம் அடைந்தவர்களும் கட்டியணைத்தபடி ஏதாவது பேச வேண்டும் என்று விரும்புவார்கள். இவை எதுவுமே நிகழாமல், கணவன் உடனே தூங்கிவிடும்போது, ​​சம்பந்தப்பட்ட பெண்கள் ‘தூக்கம் வர்றதுக்காகத்தான் இவரு செக்ஸ் வெச்சிக்கிறாரோ? அப்படின்னா நான் இவருக்கு தூக்க மாத்திரையா…’ என்று கோபப்படுவார்கள்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் மூளையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் உறவு முடிந்தவுடனே ஆண்கள் தூங்குவது. இதைப் பெண்கள் புரிந்து கொண்டால், இதையொட்டிய பிரச்னைகள் அவர்களுக்கிடையில் வராது” என்றார்.



Source link