சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே 12 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிலே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும். சிஎஸ்கே சொந்த மண்ணில் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்ற நிலையில் இன்றைய போட்டியை அணுகுகிறது. பேட்டிங், பந்து வீச்சு என இரு துறையிலும் சிஎஸ்கே சிறந்து விளங்குகிறது. டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம் கொடுத்து வருகின்றனர். நடு ஓவர்களில் ஷிவம் துபே, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் தங்களது அதிரடியால் பலம் சேர்த்துள்ளனர். மொயின் அலி, அம்பதி ராயுடு, ஜடேஜா ஆகியோருக்கும் முடிந்த அளவுக்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.Source link