ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 10 என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது படக்குழு.

படத்தின் பாடல்கள் எப்போது வெளிவரும்? இசை வெளியீடு எப்போது? எங்கே நடக்க உள்ளது என ரஜினியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமன்னா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்திற்கு பின் ரஜினியும், ‘பீஸ்ட்’ படத்திற்கு பின் நெல்சனும் இணையும் படம் ‘ஜெயிலர்’. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அந்த போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் ஷெட்டி, தமன்னா, என மல்டி ஸ்டார் படமாக ரெடியாகி வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறுகிறது.

நெல்சன், ரஜினி

படத்தில் ரஜினிக்கு டூயட் கிடையாது. அதிரடி ஆக்‌ஷனும் நெல்சன் டைப் காமெடி ஜானரும் கலந்து கொண்டு ஃபெமிலி என்டர்டெயினராக தயராகிக் கொண்டிருந்தார். மோகன்லால் இதில் ரஜினியின் நண்பராக கெஸ்ட் ரோலில்தான் வருகிறார். இசை அனிருத், அவரது ஸ்டூடியோவில் இப்போது பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் என ‘டாக்டர்’ தொழில்நுட்பக் கூட்டணியுடன் கெத்து காட்டுகிறார் ‘ஜெயிலர்’. இப்போது ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, சென்னை திரும்பியதும், ‘ஜெயில’ருக்கான டப்பிங்கை பேசிவிடுவார் என்கிறார்கள்.

ரஜினி

ரஜினியின் ‘தர்பார்’, ‘பேட்ட’ படங்களுக்கு இசை வெளியீடு நடந்தது. ஆனால், ‘அண்ணாத்த’ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை என்பதால், ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். ஜாக்கி ஷெராப்பில் இருந்து விநாயகன் வரை அத்தனை பேரையும் விழாவிற்கு அழைத்து கௌரவிக்கவும் எண்ணியுள்ளார். இதற்கிடையே வருகிற ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலையில் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு என்றும், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறலாம் என்றும் சொல்கிறார்கள்.



Source link