தமிழகம் முழுவதும் நேற்று 16 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் மாற்றம் என்பது எப்போதும் நடக்கும் நிகழ்வு தான் என்றாலும் இந்த முறை மாவட்ட ஆட்சியர் மாற்றத்தில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், அதற்கு அடுத்ததாக உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் கணவன், மனைவியான விஷ்ணு சந்திரன் மற்றும் ஆஷா அஜித் ஆகியோரை மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்ததுதான் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.