திருவள்ளூர் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28). இவர் படப்பை பகுதியில் உள்ள மொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இவரது உறவுகார பெண்ணான பவானி என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து தற்போது ஒன்றரை வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில் படப்பை பகுதியில் பணியாற்றி வரும் பிரசாந்துக்கு அதே தொழிற்சாலையில் பணிபுரியும் கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் பவானி மற்றும் பிரசாத் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கடந்த ஒரு வருடமாக மனைவிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கவிதா என்ற பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் அடிக்கடி வீட்டிற்கு வராமல் வெளியிலேயே இருந்த பிரசாத்.
உங்கள் நகரத்திலிருந்து(திருவள்ளூர்)
இது குறித்து மனைவிக்கு தெரிய வரவே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையில் கள்ளக்காதலி கவிதா பிரசாத்தின் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனக்கும் பிரசாதத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது, தான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அவரை ஏன் வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்திருக்கிறீர்கள்? அவரை விருப்பம் போல் வாழ வழி விடுங்கள் என பேசினார். இதன் ஆடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு வருட காலமாக குழந்தையை கூட பிரசாத் தூக்காமல் இருந்துள்ளார். இதனால் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கணவனுடன் தொலைபேசியில் பேசிய பின்பு பவானி, அவரது படுக்கை அறையில் மின்விசிறியை தூக்கி வீசியுள்ளார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக பவானியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க : மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம்…!
தகவல் அறிந்த பவானியின் பெற்றோர் சம்பவம் குறித்து மணவாள நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒன்றரை வயது குழந்தை இருக்கும் நிலையில் கணவன் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : பார்த்தசாரதி (திருவள்ளூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: