விருதுநகர் மாவட்டத்திலும் கீழடி போல பழங்கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு ஒன்று கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை நாட்கள் கடந்தும் அந்த உறைகிணறும் , வடிகுழாயும் அங்கேயே தான் மண்ணில் புதைந்து இருப்பதாக அறிந்து, கிருதுமால் நதி ஓடும் விருதுநகர் இராமநாதபுரம் எல்லையில் உள்ள நரிக்குடி யூனியனுக்குட்பட்ட நெடுகநேந்தல் கிராமத்திற்கு சென்றோம்.

உறைகிணறு பற்றி அங்கு யாருக்கும் தெரியவில்லை என்பதால் ஏற்கனவே அந்த உறை கிணறு பற்றிய தகவல் தந்து ஆராய்ச்சி செய்த உதவி, நெடுகநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் உதவியை நாடினோம்.

அதில் நெடுநேந்தல் கிராமத்தை சேர்ந்த யோக பிரகாஷ் இப்போது அந்த கிணறு அங்கு இருக்குமா என்று தெரியவில்லை என்றாலும் போய் பார்க்கலாம் என்று நம்மை அழைத்து சென்றார்.

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

நெடுநேந்தல் கிராமத்தில் உள்ள உறைகிணறு

வறண்ட அந்த கருவேலம் காட்டிற்குள் ஒருவேளை இந்த ஓர் ஆண்டு இடைவெளியில் அந்த வரலாற்று பொக்கிஷம் அழிந்திருக்குமோ என்ற பயத்துடனே பயணித்தோம். நல்லவேளையாக அழிவின் பிடியில் இருக்கும் அந்த உறைகிணறும் வடி குழாயும் எங்களுக்காக காத்திருந்தன.

நெடுநேந்தல் கிராமத்தில் உள்ள உறைகிணறு

உறை கிணறு:

கீழடி அருங்காட்சியகம் சென்றால் இன்றும் அங்கு ஒரு முழு உறைகிணறும் சுடுமண் குழாயும் இருப்பதை காண முடியும். அதை போன்றதொரு வளமான நாகரீகம் நமக்கு அருகிலும் மண்ணில் புதைந்துள்ளது என்று நினைத்தாலே உடல் புல்லரித்தது. முதலில் உறை கிணறு என்பது என்ன ?

நெடுநேந்தல் கிராமத்தில் உள்ள உறைகிணறு

இன்று நாம் வீடுகளில் அமைக்கும் கிணறுகளை மண் மூடாமல் இருக்க சிமெண்ட் வளையங்களை அதன் பக்கவாட்டில் அமைப்போம், அதை போலவே நம் முன்னோர்கள் சுடுமண் மூடிகளை கொண்டு கிணற்றை உருவாக்கி உடன் நீர் செல்ல சுடுமணல் செய்யப்பட்ட வடிகுழாய்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

நெடுநேந்தல் கிராமத்தில் உள்ள உறைகிணறு

கீழடியில் இந்த கட்டுமானம் கிடைத்த போது ஊரெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது இந்த கட்டுமானம் எந்த காலத்தை சேர்ந்தது என்று ஆராய்ச்சி செய்யப்படவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் அழகாக நேர்த்தியாக இருந்த வடிகுழாயும், உறை கிணறும் இன்று அழிந்துவிட்டன.

தொல்லியல் துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் உள்ள இந்த உறை கிணறு மற்றும் மண்ணில் புதைந்திருக்கும் பல அரிய பொருட்கள் வெளியுலகத்தை மீண்டும் பார்க்கும் ஏக்கத்துடன் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link