செத்து போ என்ற மனிதர்களின் கெட்ட எண்ணங்களை சாக கொடுங்கள் என்று கூறி ஆசீர்வதித்து வந்த பொலிவாக்கம் சாமியார் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், ஆசிரமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் கிராமத்தில் நித்தியானந்தம் சுவாமி இன்று அதிகாலை காலமானார். தகவலறிந்த ஸ்ரீநித்தியானந்த சுவாமிகளின் பிரம்ம சூத்திர குழுவினர் கோயில் வாளகத்தில் திரண்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆத்மார்த்த சித்தர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலை 5 மணிக்கு நித்தியானந்த சாமியாரை சமாதியில் வைத்து நல்லடக்கம் செய்தனர்.

யார் இந்த நித்தியானந்த சாமியார்?

உங்கள் நகரத்திலிருந்து(திருவள்ளூர்)

திருவள்ளூர்

திருவள்ளூர்

ரயில்வே துறையில் பணியாற்றிய நித்தியானந்தம் என்பவர் பின்னர் குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேறி திருவள்ளூர் அருகே தனக்கென்று ஒரு தனி மடத்தை நிறுவினார். அங்கு அவரை நாடி வந்த மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஞான உபதேசம் அளித்து வந்தார்.

நித்தியானந்த சுவாமிகள்

இதையும் படிங்க: குடியிருந்த வீட்டை சாய்பாபா கோயிலாக மாற்றிய திண்டுக்கல் இளைஞர்.. குவியும் பக்தர்கள்!

இந்நிலையில், நித்தியானந்தம் சுவாமிக்கு திடீர் உடல் நலக்குறைவால் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை போளிவாக்கம் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்திற்கு கொண்டு வந்து அவரது சீடர்கள், இறுதி சடங்கை செய்து, அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்தனர்.

இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த அவரது சீடர்கள், ”மனிதர்களின் இதயத்தில் உள்ள கெட்ட நினைவுகளை செத்துப்போ” என்று அவர் கூறியதாகவும், அவரது ஆசீர்வாதத்திற்குப் பின் தங்களின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டதாக பலமுறை நித்தியானந்தா சுவாமியின் கருத்துகள் இவரது போதனைகள் உண்மையுள்ள கருத்துக்கள் மன நிம்மதியைத் தந்ததுடன், இந்த ஆத்ம திருப்தி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களாகும். பகிர்ந்தனர்.

செய்தியாளர் : பார்த்தசாரதி (திருவள்ளூர்)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link