தமிழ்நாட்டில், 10ஆம் தேதி தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியான நிலையில், தற்போது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில், 90.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 26417 பேரில் 10450 மாணவர்களும், 13348 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 85.22%, பெண்கள் 94.30% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2023ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்தது. இந்த பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

மேலும் படிக்க… 11வது முடிவு நேரடி இணைப்பு | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது… ரிசல்ட் செக் செய்வது எப்படி?

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தேர்வு மாணவர்கள் முடிவுகள் www.tnresults.nic.in, www.dge.tn.nic.in , ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

துணைத் தேர்வு தேதிகள்

மேலும் 11ஆம் வகுப்பு துணை தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களை பெற வேண்டிய தேதிகள்

பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 26 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் விண்ணப்பிக்க விரும்பும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், பள்ளிகள் வாயிலாக வரும் 24 முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைத் தேர்வு விண்ணப்பிக்க வேண்டிய தேதி

பத்து மற்றும் பதினோராம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத வரும் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link