தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் ஒவ்வொரு பிரதோஷத்தையும் முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோயில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர். ஆன்மீக சிறப்பு நாட்களிலும், பிரதோஷ நாளிலும் நடைபெறும் அபிஷேக வழிபாட்டை காண பல்வேறு பகுதிகளில் மக்கள் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில் வைகாசி மாதத்தை முன்னிட்டு மகாலட்சுமி கோயிலில் உள்ள நந்தீஸ்வரன் சிலைக்கும், நாகராஜர் சிவனுக்கும் ஐந்து வகை சாதங்கள் கொண்டு பால் தயிர் பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் மகாலட்சுமி சிவகாமி தாயாருக்கும் அதிகார நந்தீஸ்வருக்கும், நாகராஜனுக்கும் சிவனுக்கும் அரளி பூ, செம்பருத்தி பூ, மல்லிகைப்பூ, ஜாதி பூ, தாமரைப்பூ போன்ற பூக்களை கொண்டு, அபிஷேகமும் செய்யப்பட்டது.

ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் வைகாசி மாத சிறப்பு வழிபாடு
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்தை வழிபடும்போது சிவனோட அருளும் நந்தீஸ்வரர் அருளும் கிடைக்கும் என்றும், மகாலட்சுமி கோயிலில் வழிபாடு செய்வதன் மூலம் நல்ல செல்வாக்கு கிடைக்கும் என்றும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும், பெண்களுக்கு நன்மைகள் கிடைத்து தொழில் வளர்ச்சி அடைவார்கள் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூஜைக்கான ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் அதிகமான பக்தர்கள் இக்கோவிலில் வழிபாடு நடத்தி செல்வது வழக்கமாகக் காணப்படும் நிலையில் வைகாசி மாத சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: