பழனி மலைக் கோயிலில் நடைபெறும் தங்க தேரோட்டத்தை பக்தர்கள் தங்கள் செல்போனில் நேரலையில் காணும் வகையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழனி மலைக்கோவிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு தங்கத்தேரோட்டம் நடைபெறும். தேர் இழுப்பதற்காக கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணமான 2000 ரூபாய் செலுத்தி பக்தர்கள் பலர் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

தங்க தேரோட்டத்தை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்திருப்பர். தற்போது இந்து சமய அறநிலையத்துறை மூலம் துவங்கப்பட்டுள்ள அலைபேசி செயலியான *திருக்கோயில்* என்ற செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் பக்தர்கள் தங்கும் இடத்திலிருந்து பழனி மலைக் கோயிலில் நடைபெறும் தங்க தேரோட்டத்தை காணமுடியும்.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

இதற்கான ஏற்பாடுகளை பழனி திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் திருக்கோயில் செயலியின் புகழ்பெற்ற 48 திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகள் பக்தர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : எச்சரிக்கை..! கோடை சீசனுக்கு மாம்பழங்கள் வாங்கும்போது இந்த விஷயங்களை கவனிங்க..!

திருக்கோயில் செயலியில் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் நேரலை, கோயில்களை சென்றடைய கூகுள் வழிகாட்டி , மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் திருக்கோவிலுக்கு செல்லும் வகையில் மின்கல ஊர்தி மற்றும் சாய் தளத்தில் நாற்காலியில் செல்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட அலைபேசி எண்கள் போன்றவை அறிந்து கொள்ளலாம்.

செய்தியாளர் – அங்குபாபு (பழனி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link