பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் 300வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையம் இயங்கும் நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்கள் அடங்கிய பகுதியில் 2வது பசுமை விமான நிலையம் அமைக்க உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதற்காக சுமார் 4,500 ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச தரத்துடன் தயாராகும் விஜய் – வெங்கட் பிரபுவின் ‘தளபதி 68’ – படத்தின் ஹைலைட்ஸ் என்ன தெரியுமா?

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இதன் 300வது நாளான இன்று ஏகனாபுரத்தில் உள்ள ஏரியில் இறங்கி 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

செய்தியாளர் : சந்திரசேகர் – காஞ்சிபுரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link