விழுந்தான் இடியாய், எழுந்தான் மலையாய்!

கடந்த போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் பெர்பார்மன்ஸ் சுமாராகவே இருந்தது. சில போட்டிகளில் டக்-அவுட் ஆகியதால், பல விமர்சனங்களுக்கும் உள்ளானார். ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது, மும்பை அணி. இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, 37 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம், டி20 போட்டிகளில் 11,000 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைக்கும் 7வது வீரர், ரோஹித் சர்மா ஆவார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி, இந்த சாதனையைப் படைத்த முதல் வீரரும் இவர் தான்.Source link