போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக நடுக்கடலில் வைத்து 6 பேரை பிடித்த மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவர்களைப் பறிமுதல் செய்தனர்.
அண்மை காலங்களாக குஜராத் மாநிலத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 200 கடல் மைல் தொலைவில் மர்மப் படகை சுற்றி வளைத்தனர்.பின்னர் படகில் சோதனை நடத்தியபோது அதில் போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
படகில் இருந்த 6 பேரை பிடித்து தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குஜராத்தில் சமீபத்தில் சுமார் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)
பின்னர் மேல் விசாரணைக்காக அவர்கள் 6 பேரும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகு, தருவைகுளம் கொண்டு வரும் வழியில் தரைதட்டி மணலில் சிக்கியது. அதனை மீட்கும் பணி நடந்து வருகிறது.
செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: